தமிழக தலைநகர் மாற்றப்படுகிறதா? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!
Tamilnadu Capital change Chennai To Trichy
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தமிழக நிர்வாகத்திற்கு திருச்சி மிகவும் உகந்த இடமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்வினையாக, அவைத் தலைவர் அப்பாவு, "அப்படியென்றால், நாட்டின் தலைநகராக சென்னையை மாற்றலாம்" என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
பின்னர், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் "காலம் வந்தால் இதை நடைமுறைப்படுத்தலாம்" என்று மறுமொழி அளிக்க, சட்டப்பேரவை கூடுதல் உற்சாகமாகியது.
இந்த விவாதத்தின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், "அனைத்து கோரிக்கைகளும் அன்போடு பரிசீலிக்கப்படும்" என்று நேர்த்தியான பதில் அளித்தார்.
English Summary
Tamilnadu Capital change Chennai To Trichy