தென்காசியில் ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முக. ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து விரைவு வண்டியின் மூலம் தென்காசிக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று அங்கு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

"இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மிகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு சங்கரன்கோயில் - புளியங்குடிக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். அத்துடன் புளியங்குடியில் புதிய விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும். 

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான ஜம்பு நதி திட்டத்திற்கு கடந்த ஆட்சியில் முறையான அனுமதி வழங்கப்படாததால் அந்தத் திட்டம் தாமதமானது. தற்போது அந்தத் திட்டத்திற்காக வனத்துறையிடமிருந்து அனுமதி வாங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்களில் பல்வேறு சாதனைகள் செய்துள்ளது. இதுவரை இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 50,390 மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். 

மேலும். உங்கள் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 11,490 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 11,400 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சிறுமி ஆராதனாவின் கோரிக்கை படி, ரூ.35 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும்.

தற்போது, குழந்தைகளும் என் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதம் அனுப்புகின்றன. என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம்" என்று அவர் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu chief minister stalin one hundrad and forty nine crores welfare assistace provide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->