பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நாளை கோவை செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.! - Seithipunal
Seithipunal


பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கோவை செல்கிறார்.

கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா வருகின்ற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆளுநர் அவர்கள் கோவை செல்கிறார்.

பின்பு பல்கலைக்கழகத்தில் மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கவர்னர் அவர்கள் முதன்முறையாக பல்கலைக்கழகத்திலே தங்க உள்ளார்.

இதையடுத்து ஆளுநரின் வருகையை முன்னிட்டு கோவையில் 15 டிஎஸ்பிக்கள் தலைமையில், 7 ஏடிஎஸ்பிக்கள், 40 இன்ஸ்பெக்டர்கள்,1200 போலீசார் தீவிர கண்காணிப்பிலும், பல்கலைக்கழகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu governor tomorrow visit Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->