உருவாகியது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை கிருஷ்ணகிரி, அரியலூர் உள்பட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "லட்ச தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(அக். 9) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கிருஷ்ணகிரி, அரியலூர் உள்பட 10 மாவட்டங்களிலும், 11 ஆம் தேதி கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். தொடர்ந்து அக்.14 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Rain Alert 09 oct 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->