இரவு 7 மணிவரை கவனம்! 18 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
Tamilnadu Rain Alert 18 08 2024
இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அறிவிப்பின்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கரூர், விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சிவகங்கையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 2000 செவ்வாழை மரங்கள் உடைந்து விழுந்து சேதமாகி உள்ளன.
இரணியல்பட்டியல் அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட 2000 செவ்வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து நாசமாகி உள்ளது.
அப்துல் காதர் கடன் வாங்கி வாழைப் பயிர் வைத்ததாகவும், தற்போது அவருக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilnadu Rain Alert 18 08 2024