தமிழகத்தில் அடுத்த 2 தினங்கள் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 2 தினங்கள் வெப்பம் அதிகரிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் 2- 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,16.09.2024 முதல் 22.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (16.09.2024 மற்றும் 17.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாமக்கல் (நாமக்கல்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) தலா 2.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை :- மதுரை : 40.2 செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 18.8 செல்சியஸ் பதிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Rain Alert Chennai Weather Update 16 09 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->