தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!
Tamilnadu rain update 25022024
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 27.2.2024 வரை தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24-25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழையும், திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
English Summary
Tamilnadu rain update 25022024