தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கபோகும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Tamilnadu rain update
தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து தற்போது பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஓட்டியுள்ள மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்று முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னனுடன் கூடிய மிதமான மழையும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.