3 நாள் முற்றுகை போராட்டம் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் வருகின்ற 29ஆம் தேதி முதல் மூன்று நாள் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு இந்த போராட்டம் நடைபெற உள்ளதாகவும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதியம், அரசாணை 234 ரத்து உள்ளிட்ட 31 அம்சப் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சியில் இன்று நடந்த ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில், வருகின்ற 29, 30, 31 ஆம் தேதி முதல் மூன்று நாள் தொடர் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பாடங்களை நடத்தி வருகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காத்திட பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இந்த காலத்தில் 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்து குடும்பங்களை நடத்த போதாது. அதிலும் மே மாதம் சம்பளம் இல்லாமல் 13 ஆண்டாக தவித்து வருகின்றனர். மற்ற தற்காலிக தினக்கூலி பணியாளர்களுக்கு கிடைகின்ற போனஸ் கூட, இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லை என்பது வேதனையிலும் வேதனை.

பணி காலத்தில் மரணம் அடைந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு இதுவரை நிதி வழங்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. அதுபோல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்த 10 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு இதுவரை அரசாணை வெளியிட வில்லை.

13 ஆண்டுகளாக பணிபுரியும் போதும், அரசின் பண பலன்களை பகுதிநேர ஆசிரியர்களால் பெற முடியவில்லை. மாணவர்கள் முன்னேற்ற நிதி வழங்கும் அரசு, அந்த கல்வியை போதிக்கும் பகுதிநேர ஆசிரியர்களையும் முன்னேற்ற வேண்டும்.

தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் குறிப்பிட்டவாறு, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கை முதல்வரிடம் நேரில் பலமுறை கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. கல்வி வளர்ச்சி நாளில், முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் விடியலை தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu School Teacher Protest announce july 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->