தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு செய்தி - தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!
TamilNadu TNGovt Sathanavu thittam
சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4.27,19,530/-ஐ 2024-2025-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசியின் சத்துணவு திட்டம் :
தமிழக அரசியின் இந்த சத்துணவுத்திட்டத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல். ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுப்பது ஆகும்.
தற்போது இது மேலும் மேம்படுத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இந்த சத்துணவு திட்டங்களை பொறுத்தவரை, திட்டத்தின் அணைத்து வேலை வாய்ப்புகளும் பெண்களுக்கு வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.
English Summary
TamilNadu TNGovt Sathanavu thittam