#தூத்துக்குடி || "ஓசி" சரக்கு தர மறுத்த பார்‌ ஊழியர் படுகொலை!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை கோவில்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். அந்த கடைக்கு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார் நடத்தும் பொறுப்பை சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். 

ஆனால் முக்கையா பாண்டியனால் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்க முடியாததால் நஷ்டத்தில் இயங்கிய பாரை கோவில்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவரை காசாளராக பணியமத்தியுள்ளார் முருகன்.

இந்த நிலையில் முன்னதாக பார் நடத்தி வந்த மூக்கையா பாண்டியன் மதுபானம் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்வதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக போசிக்கும் மது பாட்டில் கிடையாது யாராக இருந்தாலும் பணம் வாங்காமல் மது பாட்டில் தரக்கூடாது என குருசாமி கூறியுள்ளார். இந்த நிலையில் தான் மூக்கையா பாண்டியன் வழக்கம் போல் மதுபாட்டில் வாங்க குருசாமியிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் குருசாமி பணம் தர மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த முக்கையா பாண்டியன் பாருக்குள் இருந்த அறிவாளி எடுத்து குருசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் குருசாமி டாஸ்மாக் பாருக்குள் துடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோவில்பட்டி மேற்கு போலீசார் தப்பி ஓடிய முக்கையா பாண்டியனை தேடி வருகின்றனர். ஓசிக்கும் மது பாட்டில் தராததற்கு பார் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac bar employee hacked murder in Thoothukudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->