டாஸ்மாக் மதுபான விலை உயர வாய்ப்பு! அதிர்ச்சியில் மதுபிரியர்கள்! - Seithipunal
Seithipunal


சர்க்கரை ஆலைகளில் கரும்பு பிழிந்து எடுக்கும் போது கடைசியில் கிடைக்கும் மொலாசஸ் என்ற வேதிப்பொருள் மூலம் மதுபானங்கள் தயாராகி வருகிறது. 

ஒரு லிட்டர் மொலாசசில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மதுபான உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மொலாசஸ் லிட்டருக்கு ரூ. 3. 47 அதிகரித்துள்ளதால் ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக மதுபான ஆலைகளிலும் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதில் நடுத்தர, உயர்தர மதுபானங்களை உற்பத்தி செய்வதால் தான் அதிக லாபம் கிடைக்கும் என்றும் சாதாரண ரகங்களில் லாபம் கிடைப்பதில்லையாம் மதுபான உற்பத்தி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே மொலாசஸ் விலை உயர்வால் சாதாரணமாக மது உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் சாதாரணமாக மது பாட்டில்கள் ரூ. 140க்கு விற்கப்படுகிறது. 

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் சாதாரணமாக மதுபான பாட்டில்கள் உற்பத்தி குறைவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து சாதாரண ரக மதுபானங்கள் உற்பத்தியை குறைக்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக மதுபானங்கள் உற்பத்தி செலவை மதுபான ஆலைகள் சார்பில் உயர்த்தி வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மது பாட்டில்கள் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac liquor price likely rise


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->