தமிழக அரசின் மது கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்.!
TASMAC TIME CHANGE
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும், தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டது. பின்னர் நோய் பரவல் குறையவே மீண்டும் இந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
பொதுமக்கள் அதிகமாக வரும் நேரங்களில் கடைகள் திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு வந்தது. மேலும், நோய் பரவல் அதிகம் காணப்படும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் வந்தது.
தற்போது டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வருகிறது.
இந்நிலையில், நோய்த்தொற்று பரவல் காலத்திற்கு முன்பாக டாஸ்மார்க் கடைகள் வழக்கமான நேரமான "பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை" என்ற அதே நேரத்தில் மீண்டும் இயங்குவதற்கு டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக் பார்களும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.