சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டம்! முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி.! - Seithipunal
Seithipunal


சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட செய்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்துதான் குழந்தைகள் சென்னைப்பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள். இதனால் கல்வியில் கவனம் செலுத்தமுடியாது. உடலும் உள்ளமும் ஒருசேர அமைந்தால்தான் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். 

இதனையறிந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரிலும் புதியதாக தேர்வான வணக்கத்திற்குரிய சென்னைமேயர்,வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவரிடமும் திட்டம் பற்றி விரிவாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நிருவாகிகள் எடுத்துக்கூறி வலியுறுத்தியன்பேரில் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் சென்னைப்பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. 

இதன்மூலம் கற்றல் கற்பித்தல் சிறப்பாகவும் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் மிகையில்லை. வரலாற்றுச்சிறப்புமிக்க அறிவிப்பினை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர், வணக்கத்திற்குரிய மேயர்,வரிவிதிப்பு மற்றும் நிதிநிலைக்குழுத் தலைவர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் சென்னைப் பள்ளிகளின் கல்வியினை தரம் உயர்த்தும் வகையில் மாதிரிப்பள்ளிகளாக மாற்றுவதற்கு பரிசீலனை செய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teachers association thanked to CM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->