திடீர் திருப்பம்! எடப்பாடி காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு விவகாரம்! 20 வயது வாலிபர் கைது!
Teenager arrested for throwing petrol on Edappadi police station
எடப்பாடி காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் கொண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் மீது நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி காவல் நிலையத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு முறை பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உஷாராகி அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் கொண்டு வீசிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர் .அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசியவரை காவல்துறை அடையாளம் கண்டனர்.
காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் கொண்டு வீசிய நபர் பழைய எடப்பாடி ஏரி ரோடு பகுதியை சேர்ந்த 20 வயதாகும் ஆதித்யா என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் தலைமறைவாக இருந்து ஆதித்யாவை தனிப்பட்ட போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Teenager arrested for throwing petrol on Edappadi police station