தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து..!!
Telangana Governor Tamilisai wishes TN CM MKStalin on his birthday
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
மக்களுக்கு
"தி"னமும்
"மு"ழு உடல் நலத்துடன்
"க"டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்...." என தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
English Summary
Telangana Governor Tamilisai wishes TN CM MKStalin on his birthday