கஞ்சாவுக்கு அடிமை., பெற்ற மகனை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து, மிளகாய்ப்பொடி வைத்தியம் பார்த்த தாய்.! - Seithipunal
Seithipunal


கஞ்சாவுக்கு அடிமையானது 15 வயது மகனுக்கு, நூதன தண்டனை கொடுத்த தாயின் காணொளி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் : கொத்துகடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளான். 

கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவன் பள்ளிக்கும் செல்லாமல், தொடர்ந்து தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. மகனைத் திருத்த வேண்டும் என்று முடிவு செய்த அவரின் தாய், காங்கிரீட் கரண்ட் கம்பத்தில் தனது மகனை கட்டிய தாய், அவரது முகத்திலும், கண்களிலும் மிளகாய் பொடியை தூவி அவருக்கு தண்டனை கொடுத்தார்.

அப்போது அந்த சிறுவன் எரிச்சல் தாங்க முடியாமல் கத்திக் கதறிய அந்த வீடியோவில் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நூதன தண்டனைக்கு ஒரு தரப்பில் ஆதரவும், மற்றொரு தரப்பில் எதிர்ப்பும்  கிளம்பியுள்ளது.

அதே சமயத்தில், தனது மகன் நல்ல படியாக வாழவேண்டும் என்ற கனவோடு நினைத்திருந்த தாய்க்கு, தனது மகன் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழிந்து விடுவான் என்ற பதற்றமே அவனுக்கு இப்படி ஒரு கொடூர தண்டனையை கொடுக்க வைத்ததாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungana mother punish his son for ganja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->