10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த செல்வி என்பவரின் மகன் முகேஷ்(15).

இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் முகேஷ் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அதிர்ச்சியில், விரக்தியடைந்த முகேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் முக்கேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர் முக்கேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெரும்பாக்கம் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenth grade student commits suicide by hanging


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->