வக்பு சட்டதிருத்த மசோதாவை திரும்பபெரும் வரை போராட்டம் தொடரும்..தமிழக பழனி பாபாகழகம் திட்டவட்டம்!
The agitation will continue till the Wakf Act Amendment Bill is withdrawn Tamil Nadu Palani Baba Kazhagam
தமிழக பழனி பாபாகழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
வக்பு சட்டதிருத்த மசோதாவை திரும்புபெற கோரியும், பாஜக ஆளும் வட மாநிலத்தில் தலித் மற்றும் இஸ்லாமியர் தாக்கப்படுவதை கண்டித்து தமிழக பழனி பாபாகழகம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸில் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் அ. யூனுஸ்கான் தலைமை தாங்கினார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் எம். தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு சுன்னத் ஜமாத் மாநில பொது செயலாளர் அ.அகரம்கான்ஆகியோர் கண்டன உரையாற்றி பேசினார்கள். அப்போது அவர்கள் பேசும்போது கூறியதாவது:1947 நடந்த சுதந்திர போராட்டம்போல்இன்னும் பத்து ஆண்டுகளில் அடுத்தசுதந்திரபோராட்டம் கண்டிப்பாக நடக்கும்.
நமது சமுதாயத்திற்காக நாம் சுதந்திரப்போராட்டம் நடத்தியே தீர வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவரை முஸ்லிம்கள் நிம்மதியாகஇருந்ததில்லை.அவர்கள்உணர்ச்சிவசப்படாமல்தனதுபெரும்பான்மையை வைத்து அரசியல் சாசன சட்டத்தை மாற்றி விடுகிறார்கள். வி பி சிங்கொண்டு வந்த மண்டல் கம்சனை இந்து மதத்தை வைத்து மட மாற்றம் செய்தவர்கள் தான் இவர்கள். சட்டத்தை திரும்ப பெரும்வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்கள்.
மேலும் தமிழர் கட்சி மாநில தலைவர் வழ. பா. புகழேந்தி, வி.சி.க. வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் வழ. த. பார்வேந்தன், தமிழ்நாடு இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் வா. பிரபு, தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் எஸ்.ஜி. உமர் முத்தியார், தமிழ்நாடு சுன்னத் ஜமாத்மாநில அமைப்பாளர் எம். சுலைமான் மன்பஈ ஆகியோர் கண்டன உரையை வழங்கினர். கண்டன பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
English Summary
The agitation will continue till the Wakf Act Amendment Bill is withdrawn Tamil Nadu Palani Baba Kazhagam