நெடுஞ்சாலைத்துறை தோண்டிய பள்ளம்... கைக்குழந்தையோடு தவறி விழுந்த பெண்கள்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறையினரால் சாலை அகலப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே சாத்தூர் நகர் பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளன. தொடர்ந்து பெய்த மழையால், பள்ளங்கள் வெளியே தெரியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பியது. இந்நிலையில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே இருந்த பள்ளமும் மழைநீர் நிரம்பி காணப்பட்டது.

பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதை அறியாமல், அப்பகுதியில் குடையை பிடித்து 3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றனர். அப்போது பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் கைக்குழந்தையுடன் இரு பெண்கள் தவறி விழுந்துள்ளனர்.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து உடனடியாக அந்த பள்ளம் மூடப்பட்டு கான்கிரீட் போடப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டப்பட்டுள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The ditch dug by the highway department women fell with their baby


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->