மது போதையில் மகள், மகனை கொடூரமாக வெட்டி கொன்ற தந்தை! சேலத்தை பதறவைத்த சம்பவம்!
The father brutally murdered his daughter and son
சேலம் ஆத்தூர் அருகே 13 வயது மகள் மற்றும் 5 வயது மகனை வெட்டி அவரது தந்தையே கொலைச் செய்த கொடூரச் சம்பவம் பேரதிர்ச்சியாக உள்ளது.
ஆத்தூர் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார், இவரது மனைவி தவமணி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
நேற்று இரவு நெய்வேலியில் இருந்து அசோக் குமார்த் தனது வீட்டிற்கு வந்தவுடனே தனது மனைவி, மகள்கள் அருள்மொழி, வித்யா தாரணி மற்றும் மகன் அருள் பிரகாஷ் ஆகிய நான்கு பேரையும் சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் பரிதாபமான முறையில் அருள் பிரகாஷ் மற்றும் வித்யாதாரணி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்து மனைவி தவமணி, மகள் அருள்மொழி ஆகிய இருவரையும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தற்பொழுது சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் மற்றும் டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குடிபோதையில் இருந்த கணவர் அசோக் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேகொண்டு வருகின்றனர்.
English Summary
The father brutally murdered his daughter and son