அமைச்சர்களின் டீ செலவு ரூ.28 லட்சம் , பூங்கொத்து செலவு ரூ.41 லட்சம்..அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் டீ செலவு ரூ.28 லட்சம் என்றும், பூங்கொத்து செலவு ரூ.41 லட்சம் மற்றும் மாதத்திற்கு ரூ.80 ஆயிரம் வரை காருக்கு டீசல் போடப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

புதுச்சேரியில் 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் டீ செலவு ரூ.28 லட்சம் என்றும், பூங்கொத்து செலவு ரூ.41 லட்சம் மற்றும் மாதத்திற்கு ரூ.80 ஆயிரம் வரை காருக்கு டீசல் போடப்படுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன¢று புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் அரசு பலவகையில் மக்களுடைய வரி பணத்தை விரயம் செய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பள்ளி கட்டிங்கள் கட்டுவதற்கு பணம் இல்லை. புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் நகரப் பகுதியில் கழிப்படவசதி  இல்லை. பொது மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு இல்லை.  ஆனால் 4 ஆண்டுகளில் இந்த அரசு சாதாரண டீ ரூ. 28 லட்சம், ரூ. 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர் என்று தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சராசரியாக அமைச்சர்கள் 80 ஆயிரம் ரூபாய் மாதம் ஒன்றுக்கு டீசல் போட்டுள்ளனர். ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பாண்டிச்சேரியில் 80 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் போட்டால், பெரிய மாநிலத்தில் இவர்கள் ஆட்சி செய்தால் மாதம் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு டீசல் போடுவார்களா-?  முந்தைய காங்கிரஸ் அரசு இதேபோல் பல்வேறு வகையில் மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்தது. அதே தவறை காங்கிரஸ் சிந்தனை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசும் செய்து வருகிறது. காங்கிரஸ் அல்லாத காங்கிரஸ் சிந்தனை கொண்ட அரசு காமராஜர் ஆட்சி என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்யக்கூடிய அரசாக புதுச்சேரி அரசு உள்ளது. இதனை ஒவ்வொரு தனி மனிதனும் புதுச்சேரியில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. இந்த தகவல் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள தகவல் அரசு அளித்துள்ளதில் தவறில்லை. இதுபோல் பல்வேறு துறைகளில் தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெறப்பட்டால் இந்த அரசு எவ்வளவு முறைகேடு செய்துள்ளது என்பது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியும்.

ஏழை மக்கள் இறந்து விட்டால் அரசு மருத்துவமனையில் உடனடியாக செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை. தனியாரிடம் 5000 ஆயிரம் செலவு செய்து ஆம்புலன்ஸில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பூவுக்காக 41 லட்சம் ரூபாய் செலவு செய்யக் கூடிய ஒரு அரசாங்கம் இந்த மக்கள் விரோத அரசாக உள்ளது. இதனை புதுவை மக்கள் உணர வேண்டும். இவர்கள் அனைவரையும் இந்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நேர்மையானவர்களே தேர்வு செய்ய வேண்டும். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த காங்கிரஸ் சிந்தனை கொண்ட அவர்கள் வழியிலே வந்த என்.ஆர்.காங்கிரஸ், இந்த அரசை நடத்தி வருவதால், எப்படி மாற்றம் வரும். இந்த அரசு மக்களுடைய விரோத அரசாக தொடர்ந்து மக்கள் பணத்தை விரயம் செய்து வரும் அரசாக உள்ளது. கடந்த காலங்களில் மக்கள் மீது கூடுதல் வரியை செலுத்தி உப்புக்கு வரி போட்ட வெள்ளையரை வெளியேற்றினோம்.

அதுபோல புதுச்சேரி மக்களின் மீது பல்வேறு வரிகளை சுமத்திய கடந்த காங்கிரஸ் அரசும், தற்போதைய அதே காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த என்.ஆர்.காங்கிர¢சையும் ஒட்டு மொத்தமாக வீட்டு அனுப்ப வேண்டும். இலவசத்தை கொடுத்து ஊழலை மறைக்கலாம் என்று நினைத்தால் மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். அதற்கு உதாரணம் டெல்லி தேர்தல். அதே போல் இந்த தேர்தலில் மதுபான தொழிற்சாலைகள் நிறுவிய ஊழல்வாதிகளை அடையாளம் காட்டக் கூடிய தேர்தலாக அமையும். புதுச்சேரி மாநிலத்தில் எத்தனை விஐபிகள் வந்தார்கள். அவர்களுக்காகவா 40 லட்ச ரூபாய் பூங்கொத்து என்பதை யார்-. காதில் அரசாங்கம் பூ சுற்றுகிறது.  இதுகுறித்து மக்களிடம் இந்த அரசு விளக்க வேண்டு¢ம்.  திருமண மற்றும் சுப காரியங்களில் அவரவர்கள் தங்கள் சொந்த செலவில் வரிசை வைப்பார்கள். ஆனால் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவரவர்கள் சொந்த செலவில் பூங்கொத்து கொடுக்காமல் மக்கள் வரிப்பணத்தில் பூங்கொத்து கொடுப்பது, இந்தியாவிலே இதுபோன்ற கொள்ளை எங்கும் நடக்கவில்லை. ஏழை மக்களுடைய வரிப் பணத்தை, வயிற்றில் அடிக்கக்கூடிய அரசு தேவையா என்பதை ஒவ்வொரு மக்களும் முடிவு பண்ண வேண்டும். காங்கிரஸ் மற்றும் தற்போதைய காங்¢கிஸ் சிந்தனை கொண்ட தற்போதைய என் ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து செய்து வரும் மக்க்ள விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்- சாமிநாதன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The ministers spent Rs 28 lakh on tea and Rs 41 lakh on bouquets. Shocking news!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->