அதிகாரியின் அலட்சியம் குறித்து குற்றம் சாட்டிய பட்டு வளர்ப்பு நிபுணர்கள் !! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் உள்ள பட்டு வளர்ப்பு பண்ணைகளுக்கு ஒன்பது மாதங்களாக பட்டு வளர்ப்பு துறை அதிகாரி வரவில்லை என பட்டு விவசாயிகள் குற்றம் சாட்டினர். பட்டு வளர்ப்பு வழி முறைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சித் திட்டங்கள் குறித்த மதிப்புமிக்க வழிகாட்டுதல் மற்றும் தகவல் இல்லாமல் இருப்பதாக அந்த பட்டு விவசாயிகள் கூறுகிறார்கள்.

"மாவட்ட பட்டு வளர்ப்புத் துறை அதிகாரி கடைசியாக கடந்த ஜூன் மாதம் 2023ஆம் ஆண்டில் எனது வயலுக்கு வந்தார். அதற்க்கு பிறகு எந்த அதிகாரியும் இங்கு வரவில்லை. அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது அனைத்து கிராமங்களுக்கும் சென்று மல்பெரி சாகுபடி மற்றும் பிற திட்டங்கள் பற்றிய மதிப்புமிக்க தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்," என்று ஒரு பட்டு விவசாயி கூறினார்.

அவரைத் தொடர்ந்து எருமதனப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி இதைப்பற்றி பேசுகையில், "அஞ்செட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளைப் பெறுகிறேன். "மாநில அதிகாரிகள் அடிக்கடி கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். மலைப்பாங்கான அஞ்செட்டி கிராம பகுதியில் உள்ள மக்கள் ஏற்கனவே சரியான வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

இதை பற்றி பட்டு வளர்ப்பு உதவி ஆய்வாளர்கள் பேசுகையில், "அஞ்செட்டி தாலுகாவில் பட்டு வளர்ப்பு இளநிலை ஆய்வாளர்கள் ஐந்து பணியிடங்களும், பட்டு வளர்ப்பு உதவி ஆய்வாளர் ஒரு பணியிடமும் உள்ளன. ஆறு பணியிடங்களில் ஐந்து இளநிலை ஆய்வாளர்கள் ஓய்வு பெற்றோ அல்லது பணியிட மாற்றம் செய்யப்பட்டோ பணியிடங்கள் காலியாக உள்ளன" என்று கூறினார்.

மேலும், "தகுதியுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. பயிற்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்," என்று ஒரு பட்டு வளர்ப்பு உதவி ஆய்வாளர் கூறினார்.

"சில பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டு வளர்ப்பு உதவி ஆய்வாளர் கிராமங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்படும்," என பட்டு வளர்ப்பு துறை இணை இயக்குனர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the sericulture experts blamed officials negligence


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->