ஓ!!! ஒகேனக்கல்லில் நீர் வரத்து மூன்றாயிரமா!!!எப்படி?
The water flow in Okenakkal is three thousand Cubic feet
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதாலும்,அணைகளில் இருந்து திறக்கப்படும் நீராலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகின்றன.

மேலும் கர்நாடகா அணைகளிலிருந்து அவ்வப்போது நீர்வரத்து வெளியேற்றப்படுவதால் தமிழகம் தர்மபுரியில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும்,குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் காவிரி ஆற்றில், கர்நாடகா அணைகளிலிருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்ட நீரால் நேற்று வரை வினாடிக்கு 2000 கன அடியாக இருந்தது, தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் மெயின்அருவி மற்றும் சினி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
இதனால் மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் இது வரை தெரிவிக்கவில்லை எனினும் பாதுகாப்பாக இருப்பது நல்லது எனத் தெரிவித்துள்ளனர்.
English Summary
The water flow in Okenakkal is three thousand Cubic feet