திருப்பூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அடுத்த சிவநாதபுரம் அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி மணிகண்டன்(35).

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் பல இடங்களில் பெண் பார்த்தும் அமையாததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The worker hanged himself in tirupur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->