மூன்றாவது கண்ணுடன் வலம் வரும் அரசு பள்ளி மாணவி.!
third eye to government school student in viruthunagar
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பையா - தேவி தம்பதியர். இவர்களுடைய இரண்டாவது மகள் விஷ்ணுப்பிரியா அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்தபோது தனக்கு மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் இருப்பதை அறிந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக விஷ்ணுபிரியா தனது பெற்றோர்களிடம் பேசும்கூறும் போது அவர்கள் அனைவரும் அதிசயமாகவும், ஆச்சிரியமாகவும் பார்த்துள்ளனர். உடனே அவரது பெற்றோர்கள் விஷ்ணுபிரியாவின் கண்களை கட்டிவிட்டு அவர் முன் ஒவ்வொருத்தராக நிறுத்தி இவர் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு விஷ்ணுபிரியா மிகச்சரியாக சொல்லி பெற்றோர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதை போன்று கண்களை கட்டிக்கொண்டு புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்கள், ஆதார் கார்டில் உள்ள எழுத்துகள் மற்றும் எண்கள், ஒவியங்களுக்கு கலர் கொடுத்தல், செல்போனில் சரியான பெயரை தேடி அவர்களுக்கு கால் செய்தல், வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்புதல் என்று அனைத்தையும் எந்த வித பயிற்சியும் இல்லாமல் கண்களை கட்டிக்கொண்டு செய்துள்ளார்.
இதைபார்த்த அந்த ஊர் மக்கள் மாணவி விஷ்ணுபிரியாவுக்கு கடவுளின் சக்தி கிடைத்திருப்பதாகவே சொல்ல ஆரம்பித்துள்ளனர். எந்தப் பயிற்சியும் மேற்கொள்ளாமல் பள்ளி மாணவிக்கு நெற்றிக்கண் திறந்திருப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
English Summary
third eye to government school student in viruthunagar