திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் திடீரென உயிரிழப்பு!
Thiruchendur Temple one man death
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர், இன்று காலை கோவிலில் ₹100 கட்டண தரிசன வரிசையில் காத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவில் பகுதியில் பக்தர்கள் பெரும் திரளாக கூடியிருந்தனர்.
இந்தநிலையில், ஓம்குமார் திடீரென மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்தார். அருகிலிருந்த பக்தர்கள் அவருக்கு உதவ முயன்றனர். விரைவாக மருத்துவ உதவி பெற அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த நிகழ்வு கோவில் பகுதியிலும் பக்தர்களிடையும் பேரதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கான காரணம் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் உறுதியாகத் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thiruchendur Temple one man death