#மதுரை || கோவில் திருவிழா முன்விரோதத்தில் இருதரப்பு ,மோதல் - திருமாவளவன் கடும் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல் வீடுகள் மற்றும் வாகனத்தை சேதப்படுத்தியது. மேலும் நான்கு பேரை வெட்டி படுகாயம் செய்ததோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயர் பலகையை சேதப்படுத்தியுள்ளனர். இதனை கண்டித்து தலித் மக்கள் ஒத்தக்கடை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் "மதுரை அருகே திருமோகூரில் சாதி வெறியாட்டம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது, குடிபோதையில் சாதிவெறிப் பித்தர்கள் இவ்வாறு ஆதி திராவிடர்களின் குடியிருப்பிற்குள்ளே நுழைந்து கொலை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். 

சொத்துக்கள் சூறை. ஏராளமானோர் காயம். மணிமுத்து, பழநிக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சாதிஆதிக்க வெறியாட்டத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. 

சாதிய வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan condemned attack by caste fanatics on dalit people


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->