நிற்காமல் சென்ற அரசு பேருந்து – ஓடிய மாணவி! பதறவைக்கும் வீடியோ! குவியும் கண்டனம்!
Thiruppathur Vaniyampadi School Student Govt Bus
வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பகுதியில் இன்று காலை 12-ம் வகுப்பு மாணவி பேருந்திற்காக காத்திருந்தார்.
அப்போது, அரசு பேருந்து நிற்காமல் செல்ல முற்பட்டது. மாணவி அதிர்ச்சியுடன் பேருந்தை அடித்துக்கொண்டு பின் தொடர்ந்து ஓடி, கடைசியாக ஏறி சென்றார்.
இந்த சம்பவம் குறித்த காணொளி வெளியாகி பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் முழு பின்னணி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து காலை 8:30 மணி அளவில், நேதாஜி நகரம், வெப்பமரத்து ரோடு, செக்குமேடு வழியாக கோத்தகொண்டான் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.
கோத்தகொண்டான் பேருந்து நிலையத்தில், 12-ம் வகுப்பு தேர்வு எழுத செல்லும் ஒரு மாணவியும் சில பெண்களும் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது, பேருந்து நிற்காமல் செல்ல முயன்றது. இதை கவனித்த மாணவி, அவசரமாக ஓடிச் சென்று பேருந்தை அடைய முயன்றார்.
சிறிது தூரம் சென்று மாணவி பின் தொடர்வதை கவனித்த பேருந்தின் ஓட்டுநர் (Driver) பேருந்தை நிறுத்தினார். அதன் பிறகு, மாணவி பேருந்தில் ஏறினார்.
பேருந்து வழித்தட எண்: 1
ஓட்டுநர் பெயர்: முனிராஜ்
English Summary
Thiruppathur Vaniyampadi School Student Govt Bus