சென்னை அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.! வெளியான முதல்கட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியின் விடுதியில், இன்று மதியம் அளவில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், மாணவி மர்மமான முறையில் இறந்ததாக சொல்லப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்து திருவேற்காடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்று, முதல் கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.

மாணவியின் செல் போன் மற்றும் அவரின் உடமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மாணவியின் தற்கொலைக்கு கடிதம் அல்லது ஆதாரங்கள் ஏதும் கிடைக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruverkadu nursing college girl suicide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->