இந்த மாவட்ட "அரசுத்துறை அலுவலர்களுக்கு மட்டும்" விடுப்பு கிடையாது.!! ஆட்சியர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தூத்துகுடியும் ஒன்று. இந்நிலையில்  நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையால் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, ஆதிராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமிபிரியா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி "அரசுத்துறை அலுவலர்கள் யாருக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவித்துள்ளார். அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் இந்த 3 நாட்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும். வட்டாட்சியர் உள்ளிட்டோர் தங்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi collectors order govt employees dont have holidays heavy rain warning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->