தூத்துக்குடி : துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா்? இது அநீதி, கொலை வழக்கு - அதிரவைத்த சென்னை உயா்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் முடித்து வைத்து உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆா்வலா் ஹென்றி திபேன் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆா்வலா் ஹென்றி திபேன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர் மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி, வழக்கு ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில் இதனை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வருவது சட்டத்துக்கு புறம்பானது என வாதிட்டாா்.

இதனை தொடர்ந்து, மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யலாம். எனவே இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று மனுதாரரான ஹென்றி திபேன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணை குறித்து நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும் இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். எனவே இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை சாத்தியக்கூறுகளும் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், மக்களுக்கு மிகப்பெரிய அநீதி நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். இந்த சம்பவம் குறித்து எந்த அதிகாரிகளும் வருத்தப்படவில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று கேள்வி எழுப்பி இந்த வழக்கு விசாரணையை 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Gun fire case Chennai HC june 2024


கருத்துக் கணிப்பு

த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் நகர்வுகள் எப்படி உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் நகர்வுகள் எப்படி உள்ளது?




Seithipunal
--> -->