தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? உயர் நீதிமன்றம் அதிரடி காட்டம்.! - Seithipunal
Seithipunal



தூத்துக்குடி, துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடர்பாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விபரங்களை விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணை நடத்தும் வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிபிஐ-யின் விசாரணை குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நியாயமாக விசாரணை நடத்தவில்லை எனவும் அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கையை அழிக்க முடியும் எனவும் சிபிஐக்கு கேள்வி எழுப்பினர். 

விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ கையாலாகாதனத்தை காட்டுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தெரிகிறது எனவும் தொழிலதிபர் ஒருவர் விரும்பியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்கள் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi shooting issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->