நந்தனம்மா..பச்சையப்பாஸ்ஸா! மாணவர்கள் மோதல்! 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்களும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே நேற்று ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது தண்டவாளத்தில் உள்ள கற்களை கொண்டு மாணவர்கள்  மாறி மாறி ரயில் மீது எறிந்தபோது ரயிலின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி சேர்ந்த வேலவன், கண்ணன் மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தன் ஹரன் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மூன்று பேரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர் மேலும் மோதலியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள கார்த்திக், கமல் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three college students arrested for clashing at Saidapet railway station


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->