விழுப்புரத்தில் சோகம் - கிணறு வெட்டும் போது 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருங்குறுக்கை கிராம எல்லையில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயலில்  கடந்த 10 நாட்களாக புதிய கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பெரியகுறுக்கை கிராமத்தை சேர்ந்த தணிகாசலம், நெய்வனை கிராமத்தை சேர்ந்த முருகன் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அதன் படி தொழிலாளர்கள் நேற்று இரவு கிணறு வெட்டுவதற்காக பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மூன்று தொழிலாளர்கள் கிணற்றையொட்டி ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர், திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், போலீசாரும் நேரில் வந்து மூன்று தொழிலாளர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், 3 பேரின் சாவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், பாறைகளை தகர்ப்பதற்காக வெடி வைத்தபோது, அது வெடித்து மூன்று பேரும் இறந்திருப்பதாகவும், சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடல்களை எடுக்க விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு போலீசார், பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died in vilupuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->