திருநெல்வேலி : சாலையை கடக்க முயன்ற இறைச்சி கடைக்காரர் லாரி மோதி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் முத்துபாண்டியன் (வயது 55) என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.ஜி.ஓ 'ஏ' காலனியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், முத்துப்பாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்து பாண்டியனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli A butcher Larry Moti was killed while trying to cross the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->