திட்டக்குடி அருகே.. பூட்டிய வீட்டை உடைத்துச் சென்ற திருடர்களுக்கு அதிர்ச்சி.! சிசிடிவியை எடுத்துக் கொண்டு ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம் பள்ள காலிங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர் 15 வருடங்களாக தனது குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பணக்காரராக அறியப்படுபவர்.

இவருக்கு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தில் ஒரு வீடு இருக்கின்றது. அந்த வீட்டில் யாரும் குடி இருக்கவில்லை. அந்த வீட்டில் ஏதாவது பணம் நகை பதுக்கி வைத்திருக்கலாம் என்று நினைத்த கொள்ளையர்கள் சம்பவத்த தினத்தில் வீட்டிற்குள் துளையிட்டு நுழைந்து பணம் நகைகளை தேடியுள்ளனர்.

ஆனால், அங்கே எதுவும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். தொடர்ந்து தரைக்கு கீழே ஏதாவது ரகசிய லாக்கர் இருக்கும் என்று டைல்ஸ்களை உடைத்து பார்த்துள்ளனர் . அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. 

இதனால் விரக்தியடைந்த அவர்கள் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சேதப்படுத்தி தங்களது ஆத்திரத்தை காட்டியுள்ளனர். பின், போலிசிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என வீட்டில் இருந்த சிசிடிவி பதிவு இயந்திரத்தையும் கழற்றி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tittagudi Pattur thief disappointed in pachamuthu House


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->