அப்ப ஓபிஎஸ் என்ன செய்தார்? பற்றவைத்த துரைமுருகன்! திகைத்த அதிமுக உறுப்பினர்கள்! சட்டப்பேரவையில் சிரிப்பலை! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் சொல்லும் அதிமுக உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மறந்தது ஏன் என்று, அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்ப, சிரிப்பலையில் சட்டப்பேரவையில் அதிர்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாததில் பங்கேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பாராட்டி பேசினார்.

பின்னர் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவர் கொண்டு வந்த திட்டங்களையும் பாராட்டி பேசினார். 

அந்நேரம் குறுக்கிட்ட  நிதியமைச்சர் தியாகராஜன், "கொடுக்கப்பட்ட நேரத்தில் பாராட்டு தெரிவித்தே பாதி நேரம் சென்றுவிட்டது. அதிமுக உறுப்பினர் தற்போதைய பட்ஜெட் விவாதத்திற்குள் வர வேண்டும்" என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே மீண்டும் புகழ்ந்து பேசி கொண்டு இருந்தார்.

இதனையடுத்து குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அதிமுக உறுப்பினர் அவர்களின் தலைவர் கொண்டுவந்த  திட்டங்களை சரியாக சொல்லி வருகிறார். ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை. அவர் எதுவுமே செய்யவில்லையா?" என்று கேள்வி எழுப்ப, அவையில் சிரிப்பொலி அதிர்ந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly Duraimurugan speech about OPS 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->