நாளொன்றுக்கு 350 ரூபாய் உதவித்தொகை - சட்டப்பேரவையில் வெளியான அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில், சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :

* மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை ₹15,000-ல் இருந்து ₹25,000-ஆக உயர்த்தப்படும்.

* மேலும் கடலில் மீன்ப்டிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹250-லிருந்து ₹350-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* கால்நடை பராமரிப்பு மானியக் கோரிக்கை. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ஆன்லைன் அமைப்பு மூலம் பதிவு செய்து அனுமதி அளிக்க ₹87 லட்சம் செலவில் இணைய முகப்பு உருவாக்கப்படும்.


முன்னதாக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் வெளியிட்ட அறிவிப்புகளில் சில :

* பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலன் காக்க "கலைஞர் சங்க பணியாளர்கள் நல நிதி" உருவாக்கப்படும். இந்த நிதி மூலம் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம், திருமணத்திற்கு ரூ.30 ஆயிரம், கல்விக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

* ஆவினில் பால் வாங்குபவர்களுக்கு இ-பால் அட்டை (e- Milk card ) வழங்கப்படும். இதன்படி மாதந்திர பால் அட்டை இணையதளம் மூலம் வழங்கப்படும்.

* பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்கப்படும்.

* புதிய தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்தும் வண்ணம் தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். இதில் நவீன தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கு, பயிற்சி பட்டறைகள், கண்காட்சிகள் நடத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly Minister announce 05042023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->