துணை முதல்வர் உதயநிதி பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் - பாஜக அதிரடி.!
tn bjp emphasized deputy chief minister uthayanithi apologize
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும்.
கடந்த ஆண்டு ஆளுநர் குறித்து துணை முதல்வர் உதயநிதி கண்ணியமற்ற முறையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் இன்று தமிழகத்தில் மோசமான மற்றும் வெறுப்பு அரசியலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய ஆளுநர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும். பொதுமன்னிப்பு கேக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறையை அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக, ஒரு முதல்வராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tn bjp emphasized deputy chief minister uthayanithi apologize