டெல்லி புறப்பட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!
tn bjp leader annamalai going to delhi
சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, "கூட்டணியில் எந்த கட்சியாவது நிலையாக இருந்து இருக்கிறதா?. தி.மு.க.வில் உள்ள கட்சிகள் நிலையாக இருக்கிறதா? இருக்கப்போகிறதா?. அது பற்றி சொல்ல முடியாது. இது அரசியல். அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றங்கள் இருக்கும்," என்று கூறினார்.
மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைய எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் பேசு பொருளாகி உள்ளது.
English Summary
tn bjp leader annamalai going to delhi