ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட, அதானியின் ஆதரவாளரை அருகில் வைத்து ஸ்டாலின் நடத்தியக் கூட்டம்! வெளிவந்த பின்னணி!
TN CM MK Stalin conduct the meeting with former UNEP director Erik Solheim for Climate change
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (03.03.2023) நடைபெற்ற காலநிலை மாற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் "ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் எரிக் சோல்ஹைம் பங்கேற்றார்" என்று தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த எரிக் சோல்ஹைம் யார் என பின்னணியை ஆராய்ந்தால் அவர் "ஊழல் குற்றச்சாட்டால் ஐநாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்" என்கிறது தகவல்கள்.
ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பான (UNEP) செயல் இயக்குநராக இருந்தவர் நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹிம். இவர் தனது விமானப்பயணங்கள், தங்கும் விடுதி செலவுகள் போன்றவற்றுக்கு பல கோடி ஐநா நிதியை முறைகேடாக செலவிட்டார் என்கிற குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டில் பதவி நீக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டிலேயே ஐநா அவையால் தண்டிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட நபரை, ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) செயல் இயக்குநர் என்று தமிழ்நாடு அரசு இப்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும் "காலநிலை மாற்றத்துக்கு காரணமான அதானி குழுமத்தை ஆதரிப்பவர்" என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்துள்ளது. காலநிலை மாற்றத்துக்கு முதல் காரணமாக இருப்பது நிலக்கரி தான். உலகெங்கும் நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி அனல்மின் திட்டங்களை திணிப்பதால் 'நிலக்கரி ராஜா' என்று பெயர்பெற்றவர் அதானி. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் பெரும் சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்திவருகின்றன.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் அமைப்புகள் பலவும், அதானி நிறுவனத்தின் நிலக்கரி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருகின்றன. இந்நிலையில், அதானி நிறுவனத்தை ஒரு பசுமை நிறுவனமாக பிரச்சாரம் செய்கிறார் எரிக் சோல்ஹிம். அதானி நிறுவனம் அளித்துள்ள மறுப்பு அறிக்கையை தனது கீச்சு (டிவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்து அதானிக்கு ஆதரவு தெரிவித்தார் எரிக் சோல்ஹிம். மேலும், உலகெங்கும் அதானி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு நிலவும் நிலையில், அந்நிறுவனத்துடன் இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தை கொண்டாடினார் எரிக் சோல்ஹிம்.
இத்தகையை பின்னணியைக் கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் (Tamil Nadu Governing Council on Climate Change) இடம்பெற்றுள்ளது விநோதமானது.
கூடுதலாக இவர் மீது ஈழ இனப்படுகொலையிலும் குற்றச்சாட்டு உள்ளது. அங்கு அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கியவர் எரிக் சோல்ஹிம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் பிரபாகரன் தனது குடும்பத்துடன் இறந்தார், பிரபாகரன் உயிருடன் இல்லை. அமைதிப் பேச்சுவார்த்தையின்போது பிரபாகரனை பலமுறை சந்தித்திருக்கிறேன் என இன்று காலை காலநிலை மாற்ற நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கும் முன்னர் எரிக் சோல்ஹிம் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN CM MK Stalin conduct the meeting with former UNEP director Erik Solheim for Climate change