#BREAKING || சென்னை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்று இருந்தார். முதற்கட்டமாக கடத மே 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற அவர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அதன் பின்னர் அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதற்காக தனி விமான மூலம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் சென்றனர். இந்த நிலையில் தனது அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை வந்தடைந்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தனி விமானத்தில் சற்று முன்னர் சென்னை வந்தடைந்துள்ளார். வெற்றிகரமாக அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி உள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MKStalin arrived in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->