அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு! ஆவணம் எங்கே? தமிழக ஆளுநர் அதிரடி விளக்கம்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, கே.சி.வீரமணி உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை தொடர்வதற்கு, ஆளுநர் இசைவு வழங்க வேண்டும் என்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதில், முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான வழக்குகள் வழக்குகளில் சட்டம் சார்ந்த ஆலோசனை கேட்டிருப்பதாகவும், அது குறித்து பதிலுக்காக நான் காத்திருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையால் கே சி வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தரப்பில் சரியான ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை. எனவே அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வழக்கை பொறுத்தவரை, தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஆவணங்களும் எனக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்திற்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.


சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்தில் 'நிலுவையில் உள்ள மசோதாக்கள்' குறித்து ஆளுநர் இன்று அளித்துள்ள விளக்கத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor Reply To TN Minister for ADMK Ex Minister case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->