ஆன்லைன் ரம்மி விளையாட ஆதார் கார்டு - தமிழக அரசு அமைத்த ஆணையம் அதிரடி!
TN GOvt Online Game Aadhaar card
தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்பதை தடை செய்யும் உத்தரவை தமிழநாடு அரசின் ஆன்லைன் கேமிங் ஆணையம் பிறப்பித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த பல்வேறு கடுமையான விதிகளை அறிவித்துள்ளது.
* பணம் அடிப்படையாக உள்ள ஆன்லைன் விளையாட்டுகளில் அனுமதி பெற, ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை, எந்தவிதமான பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளிலும் பயனர்கள் சேர அனுமதிக்கக் கூடாது.
* ஒரே நேரத்தில் நீண்ட நேரம் விளையாடுவதை தடுக்கும் வகையில், ஒரு மணி நேரத்துக்கு மேலாக விளையாடும் போது 30 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை அறிவிப்பு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சிறார்களை பணம் தொடர்பான ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
TN GOvt Online Game Aadhaar card