தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை! விதிக்கப்பட்ட தடை! சுற்றுலா பயணிகள் கவனம்!  - Seithipunal
Seithipunal


தென்காசி, குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், குற்றால மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

 

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் இருந்தே பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.


மேட்டூர் அணை நிலவரம்: அணையின் நீர்மட்டம் 116.02 அடியாக உள்ளது. நீர் இருப்பு 87.26 டிஎம்சியாக உள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,349 கன அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 12000 கன அடி வீதமம், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Heavy Rain Tenkasi Kutralam Falls report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->