தமிழக அமைச்சரவை மாற்றம் - ஆளுநருக்கு பரிந்துரை! மதுவிலக்குத்துறை முத்துசாமிக்கு?! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகின்ற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமின் கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல், செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறையும் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த இரண்டு வழக்குகளும் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்றால் அவரிடம் உள்ள மதுவிலக்கு துறை மற்றும் மின்சாரத்துறை பறிக்கப்பட்டு, துறைகள் இல்லாத கேபினட் அமைச்சராக மட்டும் நீடிப்பார் என்ற தகவல் வெளியாகியது.

மேலும், தமிழக அமைச்சரவைகள் சில மாற்றங்களும் இருக்கலாம். அதாவது தற்போது இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கு, செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியானஉறுதியான தகவலின்படி, அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்குத்துறையும், அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதே சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகிறாரா அல்லது செந்தில்பாலாஜியே ராஜினாமா செய்ய உள்ளாரா? இல்லை துறைகள் ஏதும் இல்லாத அமைச்சராக நீடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister cabinet change june 15


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->