தமிழக வாகன ஓட்டிகளே இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! தமிழக அரசிதழில் வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில், மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும்  புதிய விதிகளை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. 

மேலும், இதனை அரசு இதழிலும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இனி,

* Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவத்தை கண்காணித்தல், 
* விபத்தை தவிர்த்தல், 
* விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

* அதிக வேகம், 
* ஹெல் மெட் / சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், 
* போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், 
* சிக்னல்களை மீறிச் செல்லுதல், 
* சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், 
* வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், 
* அவரச கால வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல்
உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே அபராதம் விதிக்கவும் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.

மேலும், போக்குவரத்து காவலர்கள் சட்டையில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Traffic New Rule implement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->