#TNBUDGET2023 : ஈரோட்டில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்'.. பட்ஜெட்டில் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்து வருகிறார். இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

இந்த நிலையில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' தமிழ்நாட்டின் 18-வது சரணாலயமாக அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 18-வது வனவிலங்கு சரணாலயமாக தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் 80,000 ஹெக்டேரில் அமைக்கப்பட உள்ளது. விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மரக்காணத்தில் ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNBUDGET2023 Periyar Wildlife Sanctuary in Erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->