#தமிழகபட்ஜெட்2023 | சென்னை கூவம், அடையாறு நீர் வழித்தடங்களில் ரூ.1500 கோடி ரூபாயில் மறு சீரமைப்பு திட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில் முக்கிய அறிவிப்பில் சில :

* தெரு நாய்களுக்கான இன விருத்தி கட்டுப்பாட்டு மையம் அமைக்க பத்து கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி காலை அரங்கம் உள்ளிட்ட நகர்ப்புற வளர்ச்சிகள் கொண்டுவரப்படும். கண்காட்சி அரங்குகள் உள்ளிட்டவைக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* சென்னை கூவம் அடையாறு நீர் வழித்தடங்களில் 1500 கோடி ரூபாயில் மறு சீரமைப்பு திட்டம் ஏற்படுத்தப்படும்

* அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

* உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைக்கப்படும்.

* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கான கருணைத்தொகை ரூ. 40 லட்சமாக உயர்வு.

* வரும் நிதி ஆண்டிலிருந்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்"பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு"

* 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்"
* இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

* ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு.

* மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் 

* சங்கமம் கலை விழா வரும் ஆண்டுகளில் மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும் 

* 25 இடங்களில் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் 

* வயது முதிர்ந்த மேலும் 591 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNBudget2023 announce for Koovam Adaiyaru


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->